காலையிலேயே சோகம்… ஏவிஎம் சரவணன் திடீர் மரணம்… அதிர்ச்சியில் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகம்….!

By Nanthini on மார்கழி 4, 2025

Spread the love

ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும் தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன், வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 86. சில காலமாக வயது மூப்பு காரணமாக உடல்நல பிரச்சனையால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை 5.30 மணி அளவில் காலமானார்.

இவருடைய உடல் ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள மூன்றாவது தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி மற்றும் புதுச்சேரி அரசின் சிகரம் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நானும் ஒரு பெண், சம்சாரம் அது மின்சாரம், சிவாஜி மற்றும் வேட்டைக்காரன் உள்ளிட்ட வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.