நாகர்கோவிலில் உள்ள போலி சூப்பிரண்டு அலுவலகத்தில் பறையன்விளை பகுதியை சேர்ந்த நித்தியா (15) என்ற பெண் தன்னுடைய குழந்தை மற்றும் தாயாருடன் வந்து புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், எனக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திங்கள் சந்தை பகுதியை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது. அதில் எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக என்னை விவாகரத்து செய்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் நான் என்னுடைய தாயாரின் பராமரிப்பில் தங்கி இருந்து வேலைக்குச் சென்று குழந்தையை பார்த்து வந்தேன். இதனிடையே 29 வயது வாலிபர் ஒருவர் instagram-ல் என்னுடன் பழகினார். முதலில் நட்பாக பழகிய அவர் என்னுடைய குடும்ப பிரச்சினைகளை கேட்டு ஆறுதலாக பேசினார்.
தொடர்ந்து என்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினார். மேலும் என்னுடைய பெண் குழந்தையை நல்ல முறையில் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆசை வார்த்தைகளை கூறினார். அவருடைய வார்த்தைகளை நம்பி நான் அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம். இந்நிலையில் நான் கர்ப்பமானேன். வீட்டில் ஓய்வாக இருந்த நேரத்தில் அவருடைய செல்போனை சோதித்துப் பார்த்தபோது மற்றொரு பெண்ணுடன் ரகசிய திருமணம் நடந்த புகைப்படங்களை பார்த்தேன். இது குறித்து அவரிடம் கேட்டதற்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதனால் நான் கருக்கலைப்பு செய்து விட்டேன்.
முதலில் இது குறித்து போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை நடத்திய போது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு என்னுடன் சேர்ந்து வாழ்வதாக கூறினார். மீண்டும் அவருடைய பேச்சை நம்பி நான் அவருடன் சென்றேன். இந்த நேரத்தில் எனது சம்பளம், நகை மற்றும் வங்கி கடன் பெற்று பல தவணையாக 15 லட்சம் ரூபாய் வரை கொடுத்தேன். இந்நிலையில் சமீபத்தில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து ஒரு நாள் அவரது செல்போனை பார்த்த போது instagram மூலம் விவாகரத்தான பெண்களை டார்கெட் ஆக வைத்து காதலாக பேசி வருவது தெரிய வந்தது.
இது பற்றி அவரிடம் கேட்டபோது அவருடைய தாயாருடன் இணைந்து என்னை தகாத வார்த்தைகளால் பேசி தற்போது பிறந்த குழந்தை அவருக்கு பிறக்கவில்லை என்று கூறி வீட்டை விட்டு வெளியேற்றினார். என்னைப்போல் பல பெண்களை ஏமாற்றி படம் மோசடி செய்து வருபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பெண் மனுவில் குறிப்பிட்டார். தற்போது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.
