“உன் மேல எனக்கு சந்தேகமா இருக்கு”… கள்ளக்காதலி நடத்தையில் வந்த சந்தேகம்… சேலையால் கழுத்தை இறுக்கி கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதலன்…!

By Nanthini on மார்கழி 3, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜகோபால் நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த லட்சுமி நாராயணா (51) என்பவர் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வரும் நிலையில் இவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவருக்கும் அங்குள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த லலிதா (49) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. லலிதாவும் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இருவருக்கும் இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் திருமணம் செய்யாமல் கடந்த 10 ஆண்டுகளாக கணவன் மனைவிபோல இந்திரா பிரியதர்ஷினி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இதனிடையே லலிதாவின் நடத்தையில் லட்சுமி நாராயணனுக்கு சந்தேகம் வந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த விவகாரத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டபோது ஆத்திரமடைந்த லட்சுமி நாராயணா வீட்டிலிருந்த சேலையால் லலிதாவின் கழுத்தை இறுக்கியுள்ளார். இதில் லலிதா மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமி நாராயணா, அதே சேலையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

   

இந்த நிலையில் நேற்று காலை வீடு திறந்து கிடந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது லலிதா தரையிலும் லட்சுமி நாராயணா தூக்கில் தொங்கிய நிலையிலும் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவருடைய உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.