BREAKING: திடீர் திருப்பம்… சற்றுமுன் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ்… பரபரப்பில் அரசியல் களம்…!

By Nanthini on மார்கழி 3, 2025

Spread the love

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் ஒவ்வொரு கட்சியினரின் நடவடிக்கையும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் NDA கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை கூட்டணியில் இணைய போவதில்லை என்று அறிவித்திருந்தனர். இதனிடையே திடீர் திருப்பமாக டெல்லி விரைந்துள்ள ஓபிஎஸ் சற்று முன் அமித்ஷாவை சந்தித்து பேசி வருகின்றார்.

NDA கூட்டணியில் இருந்து விலகிய பிறகு அமித்ஷாவை ஓபிஎஸ் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை கட்சியாக பதிவு செய்து NDA கூட்டணியில் இடம்பெறுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது. இன்னும் சற்று நேரத்தில் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்புள்ளது.