இன்று கார்த்திகை தீபத் திருநாள்… விளக்கேற்ற சிறந்த நேரம் எது?… வழிபாட்டு முறைகள் என்னென்ன?… இதோ முழு விவரம்….!

By Nanthini on மார்கழி 3, 2025

Spread the love

இந்துக்களின் முக்கிய பண்டிகையாக கார்த்திகை தீபம் கொண்டாடப்படும் நிலையில் தீப ஒளியின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் ஒரு பண்டிகையாகும். மற்றும் திருமால் இருவருக்கும் இடையே யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டபோது சிவன் ஜோதி பிழம்பாக நின்ற நாள்தான் கார்த்திகை தீபமாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீப ஒலியானது நம்முடைய வாழ்வில் உள்ள இருளை நீக்கி ஞானம் மற்றும் செல்வத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையுடன் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

குறிப்பாக தமிழகத்தில் இது சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். இன்று மாலை 4.48 மணிக்கு தொடங்கி டிசம்பர் 4 பிற்பகல் 3.08 கார்த்திகை தீபம் நீடிக்கிறது. தீபம் ஏற்றுவதற்கு தீபம் ஏற்றுவதற்கு டிசம்பர் 3 மாலை 6:00 மணி என்பது பொருத்தமான நேரம் ஆகும். பஞ்சாங்கங்களின்படி கார்த்திகை நட்சத்திரம் நீடிப்பதன் அடிப்படையில் டிசம்பர் 4 வியாழக்கிழமை அன்றும் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.

   

திருவண்ணாமலையில் மகா தீபம் இன்று ஏற்றப்படும் என்பதால் இந்த நாள் தீபத்திருநாளாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தினத்தில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வண்ணம் குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றலாம். தீபம் ஏற்றுவதற்கு அகல் விளக்குகள் சிறந்தது. கடைகளில் கிடைக்கும் செயற்கையான விளக்குகளை விடுத்து மண் விளக்குகளை வாங்கி அதை சுத்தம் செய்ய வேண்டும். முதல் நாளை விளக்குகளை வாங்கி வந்து அதை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் சுத்தப்படுத்தி காயவிடவும். பிறகு அவற்றில் மஞ்சள் குங்குமம் வைத்து நல்லெண்ணெயை தீபமிட்டு வீடு முழுவதும் விளக்குகளை ஏற்றலாம்.

   

திருக்கார்த்திகை தினத்தன்று காலையில் நீராடி உபவாசம் இருந்து மாலையில் தீபம் ஏற்றிய பிறகு உணவு அருந்துவது சிறந்தது. நாள் முழுவதும் சிவபெருமான் அல்லது முருகப்பெருமானை நினைத்து விரதம் இருக்கலாம். பொதுவாக மாலை வேலையில் சூரியன் மறைந்த பிறகு 6:00 மணி முதல் 7:00 மணிக்குள் தீபம் ஏற்றுவது உகந்தது. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பிறகு நம் வீடுகளில் தீபம் ஏற்றலாம். தீபம் ஏற்றிய பிறகு முருகப்பெருமான் விநாயகரை மனதார வழிபட வேண்டும். கந்த சஷ்டி கவசம் மற்றும் சிவபுராணம் உள்ளிட்ட பக்தி பாடல்களை பாடலாம். பொரி உருண்டை, அப்பம், அவள் மற்றும் பாயாசம் போன்றவற்றை தயார் செய்து இறைவனுக்கு படைத்து குடும்பத்தினருக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் கொடுத்து தீபத்திருநாளை கொண்டாடலாம்.