தமிழகத்தில் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இந்த மாதமே தொடங்கி வைக்க உள்ளார். எதற்காக நடைமுறை நிறைவு பெற்று 3 பன்னாட்டு நிறுவனங்களுக்கு தயாரிப்பு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் தகுதி உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக மாநில அரசின் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்படும் எல்காட் நிறுவனம் டெண்டர் வெளியிட்டது. முதல் கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்கி அதை தொடர்ந்து பிப்ரவரி மாதத்திற்குள் 10 லட்சம் பேருக்கு கொடுத்து முடிக்க தமிழக அரசை திட்டமிட்டுள்ளது. இதில் 8 ஜிபி ரேம், 256 gb SSD, ஹார்ட் டிஸ்க், கோபிலட் என்ற AI உள்ளிட்ட நவீன வசதிகள் இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு லேப்டாப்புக்கு தமிழக அரசு 22,000 ஒதுக்கீடு செய்துள்ளது.
