தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு அடுத்தடுத்து விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. ஏற்கனவே திருவண்ணாமலை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கனமழை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தை தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் நமச்சிவாய உத்தரவிட்டுள்ளார். மேலும் பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் விடுமுறை குறித்து அறிவிப்பு அடுத்தடுத்து வழியாகவும் என தெரிகிறது.
