வங்கக் கடலில் நிலவிவரும் புயல் சின்னம் எதிரொலியாக, தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, திருவள்ளூர் மாவட்டத்திற்கும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது .
இந்நிலையில் இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கை, காஞ்சி, விழுப்புரம், தி.மலை, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
