நாளை 2 மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை… கலெக்டர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

By Soundarya on மார்கழி 2, 2025

Spread the love

ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் முக்கிய திருவிழாக்கள், முக்கிய நிகழ்வுகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த அதிகாரத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கொடுத்துள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டத்தில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை  விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.  மேலும், கோட்டாறு சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.