பரபரப்பு…!'”சாகும்வரை உண்ணாவிரதம்” SIR-க்கு எதிராக மன்சூர் அலிகான் எடுத்த திடீர் முடிவு …!!

By Soundarya on மார்கழி 2, 2025

Spread the love

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்து வருகிறது. கடந்த நான்காம் தேதி முதல் வீடு வீடாக வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 94 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

பல இடங்களிலும் இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தீவிர வாக்காளர் திருத்தம்(SIR) மூலம் வேலையாக வந்த வேறு மாநிலத்தவருக்கு, தமிழ்நாட்டில் வாக்குரிமை கொடுக்க கூடாது என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், “தமிழகத்தின் உரிமைகளை படுகுழியில் தள்ளும் தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசை கண்டித்து சென்னையில் நாளை  காலை 8 மணி முதல் ‘சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்’ இருப்பதாக அறிவித்துள்ளார்.