தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகள் மற்றும் வியூகங்களில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளம் தேடி இல்லம் நாடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதே சம யம் தமிழகத்தில் இந்த முறை கூட்டணி ஆட்சி அமைவதற்கு அதிக சாத்தியங்கள் இருப்பதாகவும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல் இதுவரை அரசியலில் நாம் பார்க்காத தேர்தலாக அமையும் என்றும் கூறி வருகின்றார்.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா, ஜனவரி ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள கடலூர் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும். கட்சியை பலப்படுத்தி மாவட்ட செயலாளர் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். எங்களுக்கு செல்லும் இடமெல்லாம் மகத்தான வரவேற்பு கிடைத்து வருகின்றது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது 2026 ஆம் ஆண்டு அமையும். வரும் சட்டமன்ற தேர்தலில் புதிய வகையில் கூட்டணி ஆட்சி அமையவே 100 சதவீத வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
இந்நிலையில் ராஜ்யசபா எம்பி விவகாரத்தில் அதிமுக தேமுதிகவை ஏமாற்றவில்லை என்று பிரேமலதா கூறியுள்ளார். அதிமுகவிடம் எம்பி பதவியை 2025 ஆம் ஆண்டில் கேட்டதாக கூறிய பிரேமலதா, அதிமுகவில் இருந்து 2026 ஆம் ஆண்டில் தருவதாக உறுதி அளித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எம் பி சீட் விவகாரத்தை அதிமுக ஏமாற்றிவிட்டதாக பேசி வந்த பிரேமலதா தற்போது அந்தர்பல்டி அடித்து இருப்பது கூட்டணி கணக்குக்கு தானா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.
