BREAKING: கனமழை… இன்று(டிச..1) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… முதல் மாவட்டமாக அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 1, 2025

Spread the love

புயல் பாதிப்பு காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு டிசம்பர் 1 இன்று விடுமுறை அளித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். தமிழகத்திலும் நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. அதனால் அங்கும் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது. புயல் எதிரொளியால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்ததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.