தமிழகத்தில் தேர்தல் களம் நொடிக்கு நொடி பரபரப்பாக இருக்கும் நிலையில் அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பயணம் 2026 தேர்தல் களத்தை பரபரப்பாக மாற்றி உள்ளது. அதிமுகவில் தொடர்ந்து உட்கட்சி பிரச்சனை நிலவிவரும் நிலையில் சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய அடுத்த கட்ட நகர்வு அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்த செங்கோட்டையன் அடுத்தடுத்து அதிரடி காட்டி வருகிறார். மேலும் பல முன்னாள் அமைச்சர்கள் விஜய் கட்சியில் இணைவார்கள் என இபிஎஸ் க்கு அதிர்ச்சி கொடுத்த அவர், அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளார். அதன்படி கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் முன்னிலையில் பலரும் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு பொன்னாடை மற்றும் கட்சி துண்டு போர்த்தி செங்கோட்டையன் வரவேற்றுள்ளார்.
