2026 தேர்தல் கூட்டணி… பாமக இணையும் கட்சி… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 29, 2025

Spread the love

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் பாமகவில் நாளுக்கு நாள் உட்கட்சி பூசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தந்தைக்கு மகனுக்கும் ஏற்பட்ட தலைமை போட்டியால் பாமக தற்போது இரண்டாக பிரிந்து கிடக்கிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் ராமதாஸ் பக்கமும் இளைஞர்கள் அன்புமணி பக்கமும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நடுநிலையில் இருக்கும் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் திணறுகிறார்கள். இந்த சண்டை தற்போது உச்சத்தை எட்டிய நிலையில் இருவரும் மாறி மாறி அவர்களை எதிர்ப்பவர்களை கட்சியிலிருந்து தொடர்ந்து நீக்கி வந்தனர். இப்படியான நிலையில் கட்சியை நிறுவனர் ராமதாஸ் இனி அன்புமணிக்கு கட்சியில் இடம் இல்லை, வேண்டுமென்றால் தனி கட்சி ஆரம்பித்து கொள்ளட்டும் என்று கூறி பரப்பரப்பை கிளப்பி இருந்தார்.

இந்நிலையில் கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து வரும் பட்சத்தில் வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி யாருடன் கூட்டணி என்பதை ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று பாமக எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார். பலரிடம் எம் எல் ஏ சீட் தருவதாக பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றும் அன்புமணி, நடைப்பயணம் போனாலும் ஒன்றும் நடக்காது என்று கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் தற்போது அன்புமணியால் பாமகவுக்கு ஏற்பட்ட சரிவை 2026 ஆம் ஆண்டில் ராமதாஸ் சரி செய்வார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.