நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், ஏற்கெனவே NDRF குழுக்கள் டெல்டாவுக்கு விரைந்துள்ளன. மேலும், சிவகங்கை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘டிட்வா’ புயல் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் தமிழகத்தை நெருங்கி வருகிறது.
