ஹாங்காங்கில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க தீயணைப்பு வீரர்கள் இரண்டாவது நாளாக போராடி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது. 76 பேர் காயமடைந்த நிலையில் அதில் 28 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் காணாமல் போன 279 பேரில் சிலர் மீட்கப்பட்டுள்ளார்.
