தமிழகத்தில் ரெட் அலர்ட்.. 6 மாவட்டங்களுக்கு CM ஸ்டாலின் முக்கிய உத்தரவு…!!

By Soundarya on கார்த்திகை 28, 2025

Spread the love

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. ஆறுகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு 2 நாட்கள் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

இந்நிலையில் இன்று மற்றும் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கும் 6 மாவட்டங்களில் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர்  ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தேவைப்படும் பட்சத்தில் அந்த 6 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை உடனடியாக அனுப்பி, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும், நிவாரண மையங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.