எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் படைத்தளபதியாக பார்க்கப்பட்ட செங்கோட்டையன் இனி விஜயின் படைத்தளபதியாக மாறியுள்ளார். 50 வருடத்திற்கு மேலாக அதிமுகவில் பயணித்த செங்கோட்டையன் அரசியலில் ஆழ அகலத்தை நன்கு அறிந்தவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதால் விரக்தியில் இருந்த செங்கோட்டையன் தவெகவில் இன்று இணைந்தார். செங்கோட்டையனுக்கு நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியை விஜய் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தில் ஊழலில்லாத, நேர்மையான புதிய நிர்வாகத்தை உருவாக்குவதற்கு செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதாவை முதல்வராக்க செங்கோட்டையன் உதவியது போல விஜய்யை CM ஆக்க துணை நிற்பார் என்றும், அனைவரும் இணைந்து ஒரு புதிய வரலாற்றை படைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
