சபரிமலை அய்யப்பன் கோவிலில் துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்ட தங்கத் தகடுகளில் இருந்து தங்கம் அபகரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் ஜெயராம் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. என் நிலையில் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் கேரள உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே துவார பாலகர் சிலைகள், சபரிமலை கோவில் கதவு நிலைகளை வீட்டில் வைத்து பூஜை நடத்த ஏற்பாடு செய்த விவகாரத்தில் நடிகர் ஜெயராமை கைது செய்ய SIT முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
