உத்திரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் இடோரா கோட்டியா கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் நைனா தேவி. 22 வயதான இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கு அவருடைய குடும்பத்தினர் மாப்பிள்ளை தேடி வந்துள்ளார்கள். ஆனால் திருமண வரன்களை அவர் தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளார். இந்த நிலையில் தங்கையின் செயல்பாடுகளை நோட்டமிட்டு வந்துள்ளார் அண்ணன் ஷேர் சிங்.
தங்கையின் செல்ஃபோனை சோதனை செய்தபோது அவர் பல ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து பேசியது தெரியவந்துள்ளது. இது குறித்து தன்னுடைய சகோதரிடம் கேட்டு ஷேர் சிங் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஆத்திரத்தில் கூர்மையான ஆயுதத்தை எடுத்து தங்கையின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த நைனா தேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ஷேர் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
