இபிஎஸ்-க்கு செம ஷாக்… சசிகலா – 7, ஓபிஎஸ் – 13, செங்கோட்டையன் – 20… புதிய பரபரப்பை கிளப்பிவிட்ட முக்கிய புள்ளி…!

By Nanthini on கார்த்திகை 26, 2025

Spread the love

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வரும் நிலையில் அதிமுகவில் மட்டும் உட்கட்சி பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. இந்த பிரச்சனை ஜெயலலிதா உயிரிழந்த போது ஆரம்பித்த நிலையில் தற்போது வரை முடிவுக்கு வரவில்லை. தனக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை தொடர்ந்து இபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கி வருகிறார். முதலில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியிலிருந்து நீக்கிய இபிஎஸ் அடுத்ததாக ஓபிஎஸ்யும் நீக்கினார். இவர்களைத் தொடர்ந்து அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று கூறிய செங்கோட்டையனையும் அவருடைய ஆதரவாளர்களையும் மொத்தமாக கட்சியிலிருந்து நீக்கினார். இவர்களுடைய நீக்கம் அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என பலரும் கூறுகிறார்கள்.

இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக மூத்த பத்திரிக்கையாளர் ரவீந்திரன் துரைசாமி ஒரு கருத்தை முன் வைத்துள்ளார். இவர்களின் நீக்கம் எத்தனை சதவீதம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் அவர் கூறியுள்ளார். அதாவது சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் பிரிவு 7 சதவீதம் வாக்குகளை பிரிக்கும், ஓபிஎஸ் 13 சதவீதம் வாக்குகளை பிரிப்பார் என்றும் செங்கோட்டை எனக்கு ஆதரவு அதிக அளவில் இருப்பதால் அவர் தமிழக வெற்றிக்கழகம் கட்சிகள் இணைந்தால் அவர் சுமார் 20 சதவீதம் வாக்குகளை பிரிப்பார் என்றும் ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார். ஏனென்றால் சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆல் முக்குலத்தோரின் வாக்குகளும், தினகரனால் தென் மாவட்டங்களில் சில தொகுதிகளிலும், செங்கோட்டையன் ஈரோட்டில் வலுவாக இருப்பதால் இந்த இடங்களில் எல்லாம் அதிமுக வாக்கு வங்கி அடிப்படை என்றும் கூறப்படுகிறது .