“நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு…” ஆளுநர் ஆர்.என் ரவி மீது செம அப்செட்டில் பிரதமர் மோடி…. என்ன இப்படி பண்ணிட்டாரே…!!

By Devi Ramu on கார்த்திகை 26, 2025

Spread the love

பிரதமர் மோடி சமீபத்தில் கோவைக்கு வந்திருந்தபோது நடந்த சில நிகழ்வுகளால் அவர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது மிகவும் அதிருப்தி அடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மோடி வருகையின்போது, பீகாரில் தமிழர்களை இழிவுபடுத்திப் பேசியது மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்தது போன்ற காரணங்களுக்காக, அவருக்கு எதிராகப் பல போராட்டங்கள் நடந்தன.

இதற்கிடையில், மோடி கலந்துகொண்ட தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த மாநாட்டுக்கு மோடியை அழைத்து வந்ததே ஆளுநர் ரவிதான். ஆனால், பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, மாநாட்டு ஏற்பாடுகள் சரியாக இல்லாததால் அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

   

மாநாட்டின்போது எதிர்பார்த்த கூட்டம் இல்லாததுடன், மோடி பேசத் தொடங்கியவுடனே அங்கிருந்த கொஞ்ச கூட்டமும் கலைந்து சென்றுவிட்டது. இதனால், இப்படிப்பட்ட சொதப்பலான நிகழ்ச்சிக்கு ஏன் வந்தோம் என்று மோடி வருத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

   

இதன் விளைவாக, இனிமேல் ஆளுநர் ஆர்.என்.ரவி எந்தச் சந்திப்புக்கான கோரிக்கையை வைத்தாலும், அதை நன்றாக விசாரித்த பிறகே முடிவு செய்யுங்கள் என்று பிரதமர் மோடி தனது அதிகாரிகளுக்குச் அறிவுறுத்தலை வழங்கியுள்ளாராம். இதனால், மோடியின் குட்புக்கில் இடம்பிடிக்க நினைத்த ஆளுநருக்கு, இந்த நிகழ்வு எதிர்மறையாக முடிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.