திருப்பதி வைகுண்ட தரிசன டிக்கெட்.. Whatsappல் பெறலாம்…. பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 26, 2025

Spread the love

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு தேவஸ்தானம் சார்பில் அவ்வபோது புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பதியில் நிகழும் வைகுண்ட துவார தரிசனத்திற்கான டோக்கனை ஆன்லைனில் எளிதாக பெறலாம். Whatsappல் 9552300009 என்ற எண்ணிற்கு Hi என்று மெசேஜ் செய்ய வேண்டும்.

டிசம்பர் 30 முதல் ஜனவரி ஒன்று வரை தரிசன தேதிகள் ஓபன் ஆகும். அதில் விருப்பப்பட்ட ஒரு தேதியை பக்தர்கள் தேர்வு செய்ய வேண்டும். அவ்வளவே தான். இதை டிசம்பர் 1 ஆம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே செய்ய முடியும். டிசம்பர் 2 ஆம் தேதி மதியம் 2:00 மணிக்கு டோக்கன்கள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.