ராமதாஸ் மற்றும் அன்புமணி இணைய தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று ஜிகே மணி தெரிவித்துள்ளார். இருவரும் இணையாமல் இருப்பதற்கு நான்தான் காரணம் என்று பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவது வேதனையுடன் கூறினார்.
மேலும் ராமதாசை விட பதவி எங்களுக்கு பெரியது கிடையாது, ராமதாஸ் மற்றும் அன்புமணி இணைந்தால் மிகவும் மகிழ்ச்சி என்று கூறிய அவர் தேர்தல் கூட்டணி தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். பாமகவில் தந்தை மற்றும் மகனிடையே நாளுக்கு நாள் மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில் ஜிகே மணியின் இந்த அறிவிப்பு அடுத்த பரபரப்பை கிளப்பியுள்ளது.
