பும்ராவை ஏன் கேப்டனாக தேர்வு செய்யவில்லை..? BCCI, கவுதம் கம்பீருக்கு செல்வராகவன் கேள்வி…!!

By Soundarya on கார்த்திகை 25, 2025

Spread the love

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணியானது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அடுத்த 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 489 ரன்கள் எடுத்தது. இந்தியா வெறும் 21 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் 1-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்க முன்னிலை வகித்து வருகிறது. இதனால் பலரும் இந்திய அணியின்  வீரர்கள் தேர்வு குறித்து கேள்வி எழுப்பி வரும் நிலையில் இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் பும்ராவை கேப்டனாக நியமிக்காதது ஏன்? என்று பிசிசிஐ-க்கும் இந்திய அணியின் தலைமை பேச்சாளர் கௌதம் கம்பிருக்கும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த அவருடைய எக்ஸ் பதிவில், எப்போதும் நான் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகன். ஏன் பும்ராவை ஏன் கேப்டனாக தேர்வு செய்யவில்லை  என்று குறிப்பிட்டுள்ளார்.