அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது வருகின்ற நவம்பர் 27ஆம் தேதிக்குள் புயலாக மாறும் என்று சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இலங்கை அருகே 48 மணி நேரத்தில் மற்றொரு காற்றழுத்தால் தாழ்வு மண்டலம் உருவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொளியால் தமிழகத்தில் இன்று குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த புயலுக்கு மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமி ரேட்ஸ் பரிந்துரைப்படி, ‘சென்யார்’ என பெயரிடப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை- தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைய கூடும். தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
