திடீர் பரபரப்பு… நயினார் நாகேந்திரனின் பதவி பறிப்பு?… மீண்டும் அண்ணாமலைக்கு தலைவர் பதவி… ரிப்போர்ட் கேட்ட டெல்லி தலைமை…!

By Nanthini on கார்த்திகை 25, 2025

Spread the love

தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் தனது கூட்டணியை பலமாக வைத்துக் கொண்டு மீண்டும் ஆட்சியை தக்க வைக்க போராடிக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. அதற்காக விஜயை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சி, மாற்று கட்சியினரை இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் பாஜக தேசிய தலைவர்களை சந்திப்பதற்காக இன்று மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி செல்ல உள்ளார்.

இதனிடையே தமிழகத்தில் நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணத்திற்கு ஆதரவில்லை என செய்தி கிடைத்துள்ளதால் அவரிடம் பாஜக தலைமை ரிப்போர்ட் கேட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருடைய செயல்பாடுகள் டெல்லி தலைமைக்கு திருப்திகரமாக இல்லை எனவும் சில ஆலோசனைகள் வழங்கவே டெல்லிக்கு அழைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சமீபத்தில் நயினார் நாகேந்திரனின் பதவி பறிக்கப்பட்ட மீண்டும் அண்ணாமலைக்கு பாஜக மாநில தலைவர் பதவி வழங்கப்பட உள்ளதாக செய்தி வெளியான நிலையில் தற்போது இந்த சந்திப்பு புதிய பரபரப்பு கிளப்பி உள்ளது.