உத்திரபிரதேச மாநிலத்தில் வீட்டில் திருமணம் நடக்க இருப்பதால் முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தாயின் உடலை நான்கு நாட்கள் ஃப்ரீசரில் வைத்திருக்க மகன் அறிவுறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த மளிகை கடை வியாபாரி பூவல் குப்தாவின் மனைவி ஷோபா தேவி. இவர் நீண்ட நாள் நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் மகன்கள் ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டை விட்டு விரட்டியதால் முதியோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 19ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து முதியோர் இல்ல ஊழியர்கள் ஷோபா தேவி மகன்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். முதலில் இளைய மகன் பேசிய போது அவர் தன்னுடைய அண்ணனிடம் பேசிவிட்டு பதில் அளிப்பதாக கூறியுள்ளார்.
பிறகு முதியோர் இல்லத்தை திரும்ப அழைத்து இப்போது வீட்டில் திருமணம் நடக்கிறது இந்த நேரத்தில் உடலை கொண்டு வந்தால் துரதிஷ்டவசமாக இருக்கும். திருமணத்திற்கு பிறகு நான்கு நாட்கள் கழித்து வந்து உடலை எடுத்துக் கொள்கிறேன். நான்கு நாட்கள் உடலை ஃப்ரீசரில் வைத்திருங்கள் என்று அண்ணன் சொல்ல சொன்னதாக கூறியிருக்கிறார். இதனை அடுத்து ஊழியர்கள் மற்ற உறவினர்கள் தொடர்பு கொண்ட நிலையில் அவர்கள் ஷோபா தேவி மகன்களை சம்மதிக்க வைத்து உடலை பெற்று வந்தனர். ஆனால் மூத்த மகன் தாய்க்கு இறுதி சடங்குகள் செய்யாமலேயே உடலை அடக்கம் செய்துள்ளார். திருமணம் முடிந்த பிறகு உடலை தோண்டி எடுத்து மீண்டும் தகனம் செய்துள்ளார்கள்.
