காலையிலேயே பரபரப்பு… விஜய் கட்சியில் இணையும் செங்கோட்டையன்?… இபிஎஸ் தலையில் பேரிடி….!

By Nanthini on கார்த்திகை 25, 2025

Spread the love

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே இருப்பதால் அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வர மறுபக்கம் திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தையும் நடத்தி வருகிறது. மூன்றாம் நிலை கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்ட தொடங்கிவிட்டன. இந்நிலையில் அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் மோதல் போக்கு இந்த தேர்தலில் அதனை எதிர்க்கட்சியாக கூட வரவிடாது என்ற கருத்து தான் தற்போது நிலவுகிறது. அதிமுகவிலிருந்து இபிஎஸ் மூலம் வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் மற்றும் சசிகலா ஆகியோர் நால்வர் அணியாக உருவெடுத்து உள்ளது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டை தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. வருகின்ற நவம்பர் 27 அல்லது நவம்பர் 28 ஆகிய தேதிகளில் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக இணைப்பு முயற்சியை முன்னெடுப்பேன் என்று தொடர்ச்சியாக கூறி வந்த செங்கோட்டையன் தற்போது விஜய் கட்சியில் இணைய உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.