அடக்கடவுளே… திருமணமான 18வது நாளில் மாயமான புதுமணப்பெண்… கணவனுக்கு whatsapp-ல் வந்த மெசேஜ்… திறந்து பார்த்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி…!

By Nanthini on கார்த்திகை 24, 2025

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள செம்பொன் விளை கேசவன்சேரி பகுதியை சேர்ந்த 31 வயது இளைஞர் ஒருவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு ஊர் திரும்பி உள்ளார். பிறகு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவருக்கும் கடந்த நவம்பர் மூன்றாம் தேதி பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு மணமக்கள் இருவரும் தங்களுடைய உறவினர்கள் வீடுகளுக்கு விருந்துக்கு சென்றபடி இருந்தனர்.

இதனிடையே திருமணமான 18 வது நாள் அதாவது கடந்த நவம்பர் 21ஆம் தேதி அன்று மாலையில் கணவர் வீட்டில் இருந்த புதுமணப்பெண் திடீரென்று மாயமானார். அப்போது வீட்டில் யாரும் இல்லை என தெரிகிறது. அந்த சமயத்தில் வெளியே சென்று இருந்த இளைஞரின் தாயார் வீடு திரும்பிய போது வீட்டிலிருந்த மருமகளை காணவில்லை என்று அதிர்ச்சி அடைந்து மகனுக்கு தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை கூறி உடனடியாக வீட்டுக்கு அழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து வாலிபர் தனது மனைவியை செல்போனில் அழைத்த போது ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது. இதனால் உடனே வீடு திரும்பியதும் தன்னுடைய தாயாருடன் சேர்ந்து பல இடங்களில் மனைவியை தேடியும் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

   

இந்த நேரத்தில் வீட்டுக்குள் மீண்டும் சோதனை செய்தபோது தாலி செயின் மட்டும் இருந்துள்ளது. இதனால் தாலிச் செயினை கழற்றி வைத்துவிட்டு வீட்டை விட்டு அவர் சென்றிருக்கலாம் என்று நினைத்தனர். அப்போது இளைஞரின் செல்போனுக்கு whatsapp மூலமாக அவருடைய மனைவி வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், தனக்கு விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி இந்த திருமணத்தை தனது பெற்றோர் செய்து வைத்து விட்டார்கள்.

   

உங்களை ஏமாற்றியதற்கு என்னை மன்னித்து விடுங்கள். என்னை தேட வேண்டாம், நான் திரும்பி வர மாட்டேன். தாலியை கூட வேண்டாம் என்று தான் கழற்றி வைத்துவிட்டு வந்து விட்டேன். என்னால் உங்களுடன் சந்தோஷமாக வாழ முடியவில்லை ப்ளீஸ் என்று வாய்ஸ் மெசேஜ்யில் பேசி இருந்தார். இதனைக் கேட்டு இளம்பெண்ணின் கணவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே இது தொடர்பாக போலீசில் புகார் அளித்த நிலையில் தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.