தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே இருப்பதால் அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வர மறுபக்கம் திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தையும் நடத்தி வருகிறது. மூன்றாம் நிலை கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்ட தொடங்கிவிட்டன. இந்நிலையில் அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் மோதல் போக்கு இந்த தேர்தலில் அதனை எதிர்க்கட்சியாக கூட வரவிடாது என்ற கருத்து தான் தற்போது நிலவுகிறது. அதிமுகவிலிருந்து இபிஎஸ் மூலம் வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் மற்றும் சசிகலா ஆகியோர் நால்வர் அணியாக உருவெடுத்து உள்ளது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அதிமுக மீண்டும் இணைந்தால் வெற்றி பெற முடியும் என்று செங்கோட்டையன் முதல் ஓபிஎஸ் வரை பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் இபிஎஸ் அதற்கு இடம் கொடுக்காமல் உள்ளார். ஆனால் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் கூட ops மீண்டும் அதிமுக இணைவதற்கான பேச்சுவார்த்தை தினகரன் மற்றும் சசிகலாவிடம் நடந்து வருவதாக கூறியிருந்தார். வரும் நாட்களில் இபிஎஸ் ஒத்துப் போகும் பட்சத்தில் இவர்களுக்கெல்லாம் புதிய பதவி கிடைக்கும் என தெரிகிறது. குறிப்பாக செங்கோட்டை எனக்கு முதல்வருக்கு நிகராக பவர் கிடைக்க உள்ளதாம்.
அவரை வைத்து சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி என அனைவருக்கும் மகுசி இருக்கும் என கூறப்படுகிறது. விஜய் கூட்டணியை பெருமளவு எதிர்பார்த்து காத்திருந்த எடப்பாடிக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. அதேசமயம் அதிமுக மீண்டும் தமிழகத்தில் காலூன்ற பெரிய ஆதரவை தேடுகிறது என்று பேசி உள்ளனர். ஆனால் யாருடைய கூட்டணியும் இல்லாமல் எடப்பாடி அதிமுகவை பலம் வாய்ந்ததாக மாற்ற வேண்டும் என்று எண்ணுகிறார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியை விட்டு விலகியவர்களை கட்சிக்குள் இணைத்துக் கொள்ளலாம் என்ற முடிவில் இபிஎஸ் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
