‘நீ தான் என உலகம்” 17 வயது சிறுமிக்கு கொக்கி போட்ட கொத்தனார்… யாருக்கும் தெரியாமல் கோவிலில்…. அதிரடியில் இறங்கிய காவல்துறை..!!

By Soundarya on கார்த்திகை 24, 2025

Spread the love
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, 17 சிறுமியை காதலித்து திருமணம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் சிதம்பரத்தை சேர்ந்தவர் விஷ்வா (20). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 17 வயது சிறுமி அறிமுகமாகியுள்ளார்.
இதனை தொடர்ந்து, இருவரும் பேசி பழகி வந்த நிலையில்சிறுமியிடம் ‘நீ தான் என உலகம்” என காதல் கொக்கிப்போட்டுள்ளார் விஷ்வா. இவருடைய காதல் வலையில்  சிறுமியும் சிக்கியுள்ளார். பின்பு சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி யாருக்கும் தெரியாமல் கோயிலில் திருமணம்  செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் விஷ்வாவை போலீசார் கைது செய்து சிறுமியை மீட்டனர்.