மீண்டும் இணையும் ADMK…. செங்கோட்டையனுக்கு முதல்வருக்கு நிகரான பதவி..? மனம் மாறும் எடப்பாடி..!!

By Soundarya on கார்த்திகை 24, 2025

Spread the love
அதிமுகவில் பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைப்பது தொடர்பாக பிரச்சனைகள் நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் செங்கோட்டியான் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி நீக்கியுள்ளார். இதனால் செங்கோட்டையன், ஓபிஎஸ்,டிடிவி ஆகியோரை மீண்டும் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி சேர்க்க வாய்ப்பே இல்லை என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், மீண்டும் அதிமுக இணைந்தால் மட்டுமே வெற்றிப் பெற முடியும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முதல் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் வரை பலரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், வரும் நாட்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனம் மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கட்சியில் இணையும் அவர்களுக்கு முக்கிய பதவியும் வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக செங்கோட்டையனுக்கு முதல்வருக்கு நிகராக பதவி அமையும் என கூறப்படுகிறது.