சற்றுமுன் தமிழகத்தில் அதிர்ச்சி..! 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.. 40 பேர் படுகாயம்…!!

By Soundarya on கார்த்திகை 24, 2025

Spread the love

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இரண்டு தனியார்  பேருந்துகள் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சுமார் 40 பேர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், உயிரிழப்பு குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. தற்போது காயமடைந்தவர்கள் அனைவரும் தென்காசி அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிலருடைய நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.