இன்னும் இரண்டு நாட்களில் புயல் உருவாக உள்ளதால் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.
அதேநேரம் மதுரையில் விடுமுறை கிடையாது என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் விடுமுறை குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகலாம் என தெரிகிறது.
