அடிக்கடி பல் வலியால் அவதிப்படுறீங்களா?… உடனடி தீர்வுக்கு இதை ட்ரை பண்ணி பாருங்க… இதோ உங்களுக்கான டிப்ஸ்…!

By Nanthini on கார்த்திகை 24, 2025

Spread the love

பொதுவாகவே பற்கள் என்பது மனித உடலின் உட்புற ஆரோக்கியத்தை காட்டும் பிரதிபலிப்பு கண்ணாடி ஆகும். உடல் உறுப்புகளின் செயல்பாடு, சீர்கேடு மற்றும் சுகாதார நிலை ஆகியவற்றை பற்களின் நிலை கட்டாயம் அடிப்படையாகக் கொண்டிருக்கும். பெரியவர்கள் பொதுவாக 32 நிரந்தர பற்கள் கொண்டிருப்பது இயல்பு. குழந்தைகளுக்கு முதலில் உருவாகும் பற்கள் பால் பற்கள் என்று அழைக்கப்படுகின்றது. பிறந்தது முதல் சுமார் 5 வயது வரையில் பற்கள் விழுதல், மீண்டும் முளைத்தால் போன்ற மாற்றங்கள் இயற்கையான வளர்ச்சி நடைமுறையாகும்.

பற்கள் மூளையின் நரம்புகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டதால் மிகச் சிறந்த பராமரிப்பு என்பது அவசியமாகும். ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் தாமதம் இல்லாமல் பல் நிபுணரின் ஆலோசனையை உடனே பெற வேண்டும். உணவை நன்றாக மெல்லவும் அரைக்கவும் பற்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் சூடான அல்லது குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது வலி அல்லது அசைவுகரியம் ஏற்பட்டால் அது பற்களின் உள்பகுதிகள் பாதிக்கப்பட்டு இருப்பதற்கான அறிகுறியாகும்.

   

பல்வலி மற்றும் வீக்கத்தை குறைப்பதற்கு வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து வாயை கொப்பளித்து உடனடி நிவாரணம் தேடலாம். அதனைப் போலவே கிராம்பு எண்ணையை கற்றாழலில் நினைத்து பாதிக்கப்பட்ட பள்ளி மீது தடவலாம். கிராம்பை மென்று பயன்படுத்துவதும் வழியை குறைக்கும். ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்ற கருத்தின் அடிப்படையில் ஆலங்குச்சி மற்றும் வேப்பங்குச்சி போன்றவற்றை பல் பாதுகாப்புக்கு பயன்படுத்தலாம். இருந்தாலும் இந்த முறைகள் தற்காலிக நிவாரணம் மட்டுமே வழங்கும். பல்வலி அடிக்கடி வந்தால் அல்லது தீவிரமடைந்தால் தாமதம் இன்றே பல் மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.