கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தவெக் தலைவர் விஜய், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியின் உள்ளரங்கில் மக்களை சந்தித்து வருகிறார். இதில், விவசாயிகள், நெசவாளர்கள் என 2,000 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றி வருகிறார். அதில், தனிப்பட்ட முறையில அவங்களுக்கு(திமுக) வேணா நம்ம மேல வன்மம் இருக்கலாம்… ஆனா நமக்கு அதெல்லாம் கிடையாது. ஆனா ஏமாத்தி ஆட்சிக்கு வந்தா அத எப்டி கேள்வி கேட்காம இருக்குறது.
நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார். அண்ணா ஆரம்பிச்ச அந்த கட்சிய அதற்கப்புறம் கைப்பற்றுனவங்க என்னலாம் பண்றாங்க. குறி வைத்தால் தவறாது, தவறும் என்றால் குறியே வைக்கமாட்டேன் என்ற எம்ஜிஆர் பாடல் யாருக்கு என்று புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என்று கூறியுள்ளார்.
