தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி மாதாந்திர விடுமுறையை தவிர்த்து பொங்கல், தைப்பூசம், ரம்ஜான், பக்ரீத், மே தினம், மிலாடி நபி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் உட்பட மொத்தம் 23 நாட்கள் விடுமுறையாகும். மேலும் ஜனவரி 14-ஆம் தேதிக்குள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்குவதற்கும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு எப்போது வரும் என காத்திருந்ததால் தற்போது அது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதேசமயம் பொங்கலுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளதாக செய்தி வெளியான நிலையில் அது குறித்து அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
