தமிழகத்தில் 2026 தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. மக்களை சந்திக்கும் வேலைப்பாடுகளும், கூட்டணி குறித்த பேச்சு, தொகுதி பங்கீடு என தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. திராவிட கட்சிகளான அதிமுக மற்றும் திமுக தங்களுடைய கூட்டணியை பலப்படுத்த முயற்சித்து வருகின்றன. பாமகவில் அன்புமணி அதிமுக பக்கமும், ராமதாஸ் திமுக பக்கமும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தேமுதிக மற்றும் கூட்டணியை இதுவரை வெளியிடாமல் உள்ளது.
திமுக பிரச்சாரத்தில் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமாரும் பிரேமலதாவும் சந்தித்து பேசியதால் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல நேற்று நடந்த பிரச்சாரத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசியதால் பிரேமலதா விஜயுடன் கூட்டணி அமைப்பார் என்றும் தகவல் வெளியானது. இவ்வாறு கூட்டணி குறித்த செய்தியை பிரேமலதா மிகவும் கையாண்டு வரும் நிலையில் தேமுதிக பரப்புரையில் பேசிய அவர், அதிமுக எங்களுக்கு சீட் தருவதாக கூறிவிட்டது.
அதற்காக அதிமுகவுடன் கூட்டணி என்று சொல்லிவிட முடியாது. இந்த சீட்டை நாங்கள் 2025 ஆம் ஆண்டு தருவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அப்போது குழப்பம் ஏற்பட்டது. அதற்காக அவர்களுடன் கூட்டணி என்பதை இப்போது சொல்லிவிட முடியாது என்று பிரேமலதா கூறியுள்ளார். இவருடைய இந்த கருத்து இபிஎஸ் சீட் தராததால் தேமுதிக இன்னும் அதிமுக மேல் கோபத்தில் தான் உள்ளது என்பதை நிரூபித்துள்ளது. மேலும் துரோகம் செய்தவர்களுடன் எப்படி கூட்டணி என்று சொல்ல முடியும் என்பதையும் பிரேமலதா தெளிவாகவே கூறியுள்ளார்.
