தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பல மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று இரவு 7 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்ற விவரத்தை வெளியிட்டுள்ளது. அந்தவகையில் அரியலூர், கடலூர், திண்டுக்கல், கரூர், மயிலாடுதுறை, நாகை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, செங்கல்பட்டு, தர்மபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, தி.மலை, விழுப்புரம், விருதுநகர் ஆகிய 27 மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
