தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களமும் நாளுக்கு நாள் சூடு பிடித்துக் கொண்டே வருகிறது. என்னதான் கூட்டணி பலமாக இருந்தாலும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியை தீவிர படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரம் காட்டி வர பலர் கட்சி விட்டு கட்சி மாறும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது நெல்லை கிழக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் கிரகாம்பெல் முன்னிலையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர். தொடர்ந்து திமுகவில் மாற்றுக் கட்சியினர் ஐக்கியமாகி வருவது ஸ்டாலினுக்கு கூடுதல் பலம் கொடுத்துள்ளது.
