“அம்மா அவன் எனக்கு துரோகம் பண்ணிட்டான், நான் செத்துடுறேன்”… வேறொரு பெண்ணுடன் பழகிய காதலன்… உயிரை மாய்த்து கொண்ட கல்லூரி மாணவி…!

By Nanthini on கார்த்திகை 22, 2025

Spread the love

மேட்டூர் அருகே மாதையன் குட்டையில் காதலன் ஏமாற்றியதால் முதலாமாண்டு கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேட்டூர் அருகே மாதையன் குட்டை ராஜாஜி நகர் பகுதியில் சேர்ந்த சக்திவேல் மற்றும் சங்கீதா தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவருடைய இரண்டாவது மகள் சிவாலினி (18) நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதை இடையே சிவாலினியும் மாரியம்மன் குட்டை பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பார்த்திபன் வேறொரு பெண்ணை காதலித்து வருவதாக சிவாலினிக்கு தெரியவந்துள்ளது. இதனால் மனமடைந்த அவர் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பார்த்திபனை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.