“கழுத்தை நெரித்த கடன் தொல்லை” நெஞ்சை கல்லாக்கிக்கொண்டு வாலிபர் எடுத்த முடிவு… ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி…!!!

By Soundarya on கார்த்திகை 22, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம் சிக்கமல்லி காவல் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயன்(42) இவருக்கு திருமணம் ஆகி சிவக்குமார், ஸ்ரீநிதி என்ற இரண்டு பிள்ளைகள் இருந்தனர். நாராயணனின் தந்தை விட்டல் இவர்களுடனே வசித்து வந்துள்ளார். இதற்கிடையில்  சிவக்குமார் கடந்த சில மாதங்களாக அதிக கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார் . இந்த நிலையில் சிவகுமார் நேற்று மாலை தன்னுடைய இரண்டு பிள்ளைகள் மற்றும் தந்தையுடன் சேர்ந்து கிராமத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிள்ளைகள் இருவரையும் கிணற்றுக்குள் தள்ளிவிட்ட சிவக்குமார் பிறகு தன்னுடைய தந்தையுடனும் அதே கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் நான்கு பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த  சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து வருகிறார்கள்