திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த அடையார் குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய். 27 வயதான இவர் டிரைவர். ஐந்து வருடங்களுக்கு முன்பு ஷர்மிளா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. கடந்த சில நாட்களாக மனைவி ஷர்மிலா நடத்தையில் விஜய்க்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷர்மிளா அதே பகுதியில் உள்ள தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்கிடையில் விஜய் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக வீட்டில் பிணமாக தூக்கில் தொங்கியுள்ளார்.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பெயரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மற்றும் அவருடைய தாயாரிடம் விசாரணை நடத்தியதில் ஷர்மிளா திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். அதாவது, எனக்கும் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் பல இடங்களில் சென்று ரீல்ஸ் எடுத்தோம். இது அறிந்து என்னுடைய கணவரை என்னை கண்டித்தார். இதனால் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரத்தில் நானும் எனது தாயாரும் விஜயை உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்து தூக்கில் தொங்க விட்டோம் என்று கூறியுள்ளார்கள். இதனை எடுத்து காவல்துறையினர் ஷர்மிளா மற்றும் அவருடைய தாயாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
