தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக இந்த தேர்தலை விஜய் எதிர்கொள்ள உள்ள நிலையில் தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. அதேசமயம் விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்கவும் முயற்சியில் அனைத்து கட்சிகளும் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் விஜயின் அரசியல் வருகையால் 2026 தேர்தல் களம் வழக்கத்திற்கு மாறான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் தமிழக வெற்றி கழகம் கைகோர்க்க உள்ள கூட்டணி மீது அக்கட்சி தொண்டர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இதனிடையே விரைவில் CSK என்ற கட்சியை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள கூல் சுரேஷ், நிச்சயமாக விஜயுடன் கூட்டணி அமைப்பேன் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார்
