மீண்டும் புயல் சின்னம்… தமிழகத்தில் கனமழை வெளுக்கப் போகுது…!

By Nanthini on கார்த்திகை 20, 2025

Spread the love

தமிழகத்தில் ஏற்கனவே வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் வருகின்ற நவம்பர் 22ஆம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அது இரண்டு நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனிடையே தமிழகத்தில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இன்று இரவு 7 மணி வரை அரியலூர், கடலூர், குமரி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.