4 மணி நேரம் காத்திருப்பு….! தவெக பெண் நிர்வாகிகளுக்கு இடையே மோதல்…. திடீர் பரபரப்பு…!!

By Devi Ramu on கார்த்திகை 20, 2025

Spread the love

சென்னை, புளியந்தோப்பு கன்னிகாபுரம் கஸ்தூரி பாய் காலனியைச் சேர்ந்த பல்லவி (35) என்பவர் தமிழக வெற்றிக் கழகத்தின் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளராக உள்ளார். அதே கட்சியில் வடக்கு மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளராக உள்ள கலைச்செல்வி (44), புளியந்தோப்பு பெரியார் நகரைச் சேர்ந்தவர்.

கலைச்செல்வி, தன் ஆதரவாளர்களுடன் மாவட்டச் செயலாளர் பல்லவியின் வீட்டிற்குச் சென்று, தனக்கும் தன்னுடன் வந்த நிர்வாகிகளுக்கும் கட்சியில் பொறுப்புகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், பல்லவி அவர்களைக் காத்திருக்கச் சொல்லி சுமார் நான்கு மணி நேரம் வரையிலும் வெளியே வரவில்லை எனக் கூறப்படுகிறது.

   

நீண்ட நேரம் காத்திருந்த கலைச்செல்வி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சத்தமிட்டதால், அங்கு வந்த பல்லவி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும், கலைச்செல்வி தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டனர். கலைச்செல்விக்கு அமைப்பாளர் பதவியும், அவரது தோழி அஸ்வினிக்கு துணை அமைப்பாளர் பதவியும் வழங்கும்படி அவர் பல்லவியிடம் வலியுறுத்தி வந்துள்ளார்.

   

ஆனால், அஸ்வினியின் கணவர் திமுகவில் பொறுப்பில் இருப்பதால், அவர் கட்சிக்குள் குழப்பம் விளைவிக்க முயல்வதாகச் சந்தேகம் கொண்ட பல்லவி, அவர்களுக்குப் பொறுப்புகள் வழங்குவதைத் தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட மோதல் குறித்து இரு தரப்பிலும் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, போலீசார் விசாரணைக்குப் பிறகு சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.