சனி வக்ர பெயர்ச்சி என்பது சனிபகவான் தன்னுடைய வழக்கமான பாதையிலிருந்து பின்னோக்கி செல்லும் ஒரு கிரக பெயர்ச்சி. 2025 ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி முதல் நவம்பர் 28ஆம் தேதி வரை சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் இருக்கும் நிலையில் இது சுமார் 138 நாட்களுக்கு நீடிக்கும். சனிபகவான் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நன்மையை வழங்குவார். இந்நிலையில் சனி வக்ர பெயர்ச்சி நவம்பர் 28 அன்று முடிவடைந்து அதன் மூலம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றது. இதனால் வக்கிர பெயர்ச்சி காலம் முடிவடைந்து அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். இதுவரை பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் பல மடங்கு பலன்களை சனிபகவான் அள்ளித் தரப் போகின்றார்.
கடந்த சிகடகம்:ல வருடங்களாக சனி பெயர்ச்சியால் அதிகபட்ச துன்பங்களை அனுபவித்த ராசிகளில் முதன்மையானது கடக ராசி தான். அஷ்டம சனி விலகினாலும் சனி பத்திரம் அதே தாக்கத்தை தந்தது. இந்த நிலை மாறி அதிர்ஷ்ட ராசியாக கருதப்படும் சனி வக்கிர நிவர்த்தி ஏற்படும்போது தடைப்பட்ட விஷயங்கள் அனைத்துமே நீங்கும். இதனால் தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் மற்றும் வருமானத்தில் மகிழ்ச்சியும் மனநிறைவும் கிடைக்கும்.
கும்பம்:
எந்த ராசிக்காரர்கள் சனி வக்கிரப் பெயர்ச்சியால் கடந்த சில காலம் நெருக்கடிகளையும் வருமானத் தடையையும் அனுபவித்திருப்பீர்கள். இருந்தாலும் ஏழரை சனியின் கடைசி சில மாதங்களின் நிலை மாற்றம் ஏற்பட்டு வருமான தடைகள் நீங்கி புதிய வாய்ப்புகள் உருவாகும். நிதி நிலையில் முன்னேற்றம் அதிகமாக ஏற்படும். பணத்திற்கான தேவை முற்றிலுமாக நிறைவேறும்.
துலாம்:
இந்த ராசிக்காரர்களுக்கு 2025 சனி வக்கிர பெயர்ச்சி உத்தியோகம், உடல்நலம் மற்றும் கொடுக்கல் வாங்கலில் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தற்போது இந்த காலம் முடிவடைவதால் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல யோகம் உருவாகும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு, பூர்வீக சொத்துக்களில் உள்ள சிக்கல்களுக்கான தீர்வு, கடன் அடையாமை மற்றும் நல்ல வேலை வாய்ப்புகள் என அனைத்துமே கிடைக்கும்.
