தூக்க கலக்கத்தில் இருந்த டிரைவர்…! டீ குடிக்க சென்ற ஐயப்ப பக்தர்கள்…. சபரிமலை சென்று திரும்பிய போது நடந்த சோகம்…!!

By Devi Ramu on கார்த்திகை 19, 2025

Spread the love

திருத்தணியைச் சேர்ந்த சிறுவர்கள் உட்பட 36 பேர் கொண்ட ஐயப்ப பக்தர்கள் குழு, சபரிமலைக்குச் சென்றுவிட்டு, பேருந்தில் திருத்தணி நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று காலை திருப்பத்தூர் மாவட்டம் மின்னூர், சிட்கோ பகுதியில் சாலையோரம் பேருந்தை நிறுத்திவிட்டு, பக்தர்கள் தேநீர் அருந்துவதற்காகச் சாலையைக் கடந்துள்ளனர்.

அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் முன்னால் சென்ற ஒரு கண்டெய்னர் லாரியின் பக்கவாட்டில் மோதியுள்ளார். கட்டுப்பாட்டை இழந்த அந்தச் சரக்கு வாகனம், சாலையைக் கடந்து கொண்டிருந்த நான்கு ஐயப்ப பக்தர்கள் மீது மோதியது.

   

இந்த விபத்தில் கங்காதரன் மற்றும் சூர்யா ஆகிய இரு பக்தர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். மேலும், ஆதி மற்றும் நரசிம்மன் இருவரும் படுகாயங்களுடன் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

   

இந்த விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய சரக்கு வாகன ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சபரிமலை யாத்திரை முடிந்து வீடு திரும்பிய பக்தர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.