இந்திய சமையலறையின் இன்றியமையாத மருத்துவப் பொருளாக இருக்கும் மஞ்சளில், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடக்கூடிய குர்குமின் என்னும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளது. ஆரோக்கியம் மற்றும் நிறத்திற்காகப் பயன்படுத்தப்படும் இந்த மஞ்சளில், மாவு வகைகள் மற்றும் செயற்கை நிறமிகள் அதிகளவில் கலப்படம் செய்யப்படுகின்றன. நீங்கள் வாங்கும் மஞ்சள் தூள் சுத்தமானதா என்பதைக் கண்டறிய சில எளிய சோதனைகள் உள்ளன.
- மஞ்சள் தூளை பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரலால் தேய்க்கும்போது, சுத்தமான மஞ்சள் நீண்ட நேரத்திற்குத் தடித்த நிறமாக ஒட்டியிருக்கும். கலப்படம் மஞ்சள் நிறம் சீக்கிரம் மறைந்துவிடும்.
- சுத்தமான மஞ்சள் தூள் மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும். கலப்பட மஞ்சள் கொரகொரப்பாக இருக்கும். மேலும், மஞ்சள் தூளைத் தண்ணீரில் குழைத்துத் தோலில் பூசிப் பார்க்கும்போது, அசல் மஞ்சள் முழுவதும் ஊடுருவிவிடும்; கலப்படம் இருந்தால் பொடியாக மேலே தங்கியிருக்கும்.
- ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளைப் போட்டால், சுத்தமான மஞ்சள் தண்ணீரில் கரைந்து தெளிவான மஞ்சள் நிறத்தைக் கொடுக்கும். கலப்படம் செய்யப்பட்டிருந்தால், அடியில் மணல் அல்லது கசடு போலத் தங்கிவிடும்.
